விருதுநகர் பாண்டியன் நகரில் இந்தியா கூட்டணி சார்பில் மணிப்பூர் வன்முறை சம்பவங்களை தடுக்க தவறிய மத்திய, அந்த மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் சாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ரோசல் பட்டி பஞ்சாயத்து தலைவர் தமிழரசி ஜெயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், நகர தலைவர் நாகேந்திரன், செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து, வக்கீல் சீனிவாசன், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் சிவகுருநாதன் நிறைவுரையாற்றினார். முடிவில் வட்டார காங்கிரஸ் செயலாளர் எட்வர்டு நன்றி கூறினார்.