நிரந்தர பணியமர்த்தக்கோரி அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நிரந்தர பணியமர்த்தக்கோரி அனைத்து செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-26 20:36 GMT

ஒப்பந்த செவிலியர்களை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் சிந்தன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பாண்டி, துணை செயலாளர் பூபதி உள்பட அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள வழிகாட்டி செவிலியர் பணியிடங்களை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு சரண்டர் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும், எம்.ஆர்.பி.ஒப்பந்த செவிலியர்களை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் நிரந்தர செவிலியராக பணி அமர்த்த வேண்டும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி உள்பட 6 மாவட்டங்களின் சுகாதார மாவட்டத்திற்கு தேவையான செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்