மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துதமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-21 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தைக் கண்டித்தும், அதை அடக்கத் தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்தும், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பொறுப்பாளர் லெனின் முருகன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் முகமது உமர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத்தலைவர் நூர்முகமது ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் கலவரத்தை அடக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட பொறுப்பாளர் ராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்