கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கவுரவ விரிவுரையாளர்கள் செந்தில், அரசு, ராஜா, செல்வி, வரலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யு.ஜி.சி. நிர்ணயித்த அடிப்படை ஊதியத்தை வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநில தகுதி தேர்வினை உடனடியாக நடத்த வேண்டும். மாத ஊதியம் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக மிகை பேராசிரியர்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.