தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-13 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமை தாங்கினார். ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடாதபடி பழிவாங்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் வீர முனிராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் குமரவேல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் ராமசுந்தரம், மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன், தொகுதி தலைவர்கள் முத்து, தேவராஜ், கோவிந்தராஜ், முன்னாள் வட்டார தலைவர்கள் முருகவேல், ஆறுமுகம், இலக்கிய அணி மாவட்ட தலைவர் முருகவாசன், நிர்வாகி சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்