அருமனையில் பழைய பள்ளிக்கூட கட்டிடம் இடித்து அகற்றம்
அருமனையில் பழைய பள்ளிக்கூட கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
அருமனை:
அருமனை மேலத்தெருவில் அரசு எல்.எம். நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பழைய கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் காலாவதியான கட்டிடங்களில் மாணவர்களை அமர வைத்து கற்பிக்ககூடாது என்று தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் பழைய வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த பள்ளியிலும் என்ஜினீயர் ஆய்வு மேற்கொண்டு பழமையான கட்டிடத்தில் மாணவர்களை அமர்த்தி பாடம் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் இந்த கட்டிடம் பல மாதங்களாக வகுப்பறையாக பயன்பாடு இல்லாமல் இருந்தது. தற்போது இந்த கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.