ஆக்கிரமித்து கட்டியிருந்த குடிசை வீடுகள் அகற்றம்

அரக்கோணம் அருகே ஆக்கிரமித்து கட்டியிருந்த குடிசை வீடுகள் அகற்றப்பட்டு 21 ஆயிரம் சதுர அடி இடம் மீட்கப்பட்டது.

Update: 2023-04-11 18:02 GMT

அரக்கோணம் அருகே ஆக்கிரமித்து கட்டியிருந்த குடிசை வீடுகள் அகற்றப்பட்டு 21 ஆயிரம் சதுர அடி இடம் மீட்கப்பட்டது.

குடிசை வீடுகள் அகற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கைனூர் பகுதிக்குட்பட்ட மேய்க்கால் புறம்போக்கில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டியிருப்பதாக அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு மேய்க்கால் புறம்போக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நான்கு குடிசை வீடுகளை அகற்றி, சுமார் 21 ஆயிரம் சதுர அடி இடத்தை மீட்டனர்.

வாக்குவாதம்

அப்போது ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டியிருந்த உரிமையாளர்கள் வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தாசில்தார் சண்முகசுந்தரம் கூறுகையில், மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மந்தைவெளி இடத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது. இங்கே வீடு கட்டியிருந்த நான்கு பேருக்கும் மாற்று இடம் எதுவும் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்