ஆக்கிரமித்து கட்டியிருந்த முதியவர் வீடு அகற்றம்

ஆக்கிரமித்து கட்டியிருந்த முதியவர் வீடு அகற்றப்பட்டது.

Update: 2022-08-29 18:40 GMT

ஆலங்குடி:

ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்ணவால்குடி ஊராட்சியில் உள்ள தச்சன்கோரைப்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் அந்தப் பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஓட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரைப்போல அந்தப் பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் செல்வராஜ் நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாகவும் இதனால் அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட முடியவில்லை என்றும் கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். மேலும் 40 ஆண்டு காலமாக வசித்து வருவதாகவும், வேறு எதற்கும் பயன்படாத இடத்தில் நான் வசித்து வருவதாகவும், இதனால் தனக்கு மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க வேண்டும் என்று செல்வராஜ் மனு அளித்திருந்தார். இதையடுத்து ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து செல்வராஜ் வீடு உள்பட அக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.‌ இதற்கிடையே செல்வராஜ் மற்றும் அவரது மருமகள் சுதா ஆகிய இருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை அங்கிருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். மேலும் செல்வராஜ், சுதா ஆகியோர் வீட்டிற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு வீட்டை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்