நகராட்சி மார்க்கெட் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி தொடக்கம்

அரக்கோணம் நகராட்சி மார்க்கெட்டில் புதியகட்டிடம் கட்டுவதற்காக, பழைய கட்டிடங்களை இடிக்கும் பணிதொடங்கியது. இதனால் வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2023-07-06 17:56 GMT

ரூ.9 கோடியில் புதிய கட்டிடம்

அரக்கோணம் நகராட்சி மார்கெட் 1984-ஆம் ஆண்டில் 194 கடைகளுடன் கட்டப்பட்டு இயங்கி வந்தது. தற்போது இந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு சுமார் ரூ.9 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடத்தை இடிக்கும்பணி நேற்று தொடங்கியது.

நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பார்த்தசாரதி தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். அப்போது மார்கெட் வியாபாரிகள் ஆணையர் பார்த்தசாரதியிடம் ஒரு நைளைக்கு ஒரு பகுதியை இடிக்கவும், புதிய கட்டிடம் கட்டித்தரும் வரை குறைந்த வாடகையில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இடிக்கும் பணி தொடங்கியது

இதனை ஏற்று வியாபாரிகளுக்கு மாற்று இடமாக அம்பேத்கர் வளைவு இரட்டை கண் வாரவதி அருகே ஏற்பாடு செய்து தருவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தார். இதனையடுத்து டவுன் போலீஸ் நிலைய நுழைவு பகுதியின் அருகில் காந்தி ரோடு பகுதியில் இருந்த மார்கெட் கட்டிடத்தின் மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்தனர்.

பகுதி வாரியாக கட்டிடம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்