ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

கரிக்கல் கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2023-10-05 18:17 GMT

சோளிங்கர்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் கரிக்கல் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செயது 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் உதவி கோட்ட பொறியாளர் உமாசங்கர், உதவி பொறியாளர் லிங்கேஸ்வரன், சாலை ஆய்வாளர்கள் ஆறுமுகம், சவிதா உள்ளிட்ட அதிகாரிகள் சென்று நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அதிரடியாக அகற்றினார்கள். அப்போது வருவாய்த் துறையினர், மின் ஊழியர்கள் உடனிருந்தனர். ஆக்ரமிப்பு அகற்றும் பணியின் போது அசம்பாவிதங்கள் நடைபெறமலிருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்