ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்

அரக்கோணத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-24 17:50 GMT

ஆக்கிரமிப்பு வீடுகள்

அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டையில் அரக்கோணம் - ஒச்சேரி ரோட்டில் மாநில நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைகத்துறை அதிகாரிகள் சென்றனர்.

அரக்கோணம் கோட்ட உதவி செயற்பொறியாளர் உமா செல்வன், உதவி செயற்பொறியாளர் (மேற்கு) லிங்கேஸ்வரன், சாலை ஆய்வாளர்கள் ஆறுமுகம், சபிதா, சுகுமார் மற்றும் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

அப்போது ஆக்கிரமிப்பாளர்கள், வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் மற்றும் டவுன் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மாலை 3 மணி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டி வசித்து வந்தவர்கள் சமாதானம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்