பழுதடைந்த சமுதாய கூடத்தை இடிக்கும் பணி

பழுதடைந்த சமுதாய கூடத்தை இடிக்கும் பணி

Update: 2022-06-05 14:02 GMT

வேதாரண்யம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வேதாரண்யத்தில் பழுதடைந்த சமுதாய கூடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

பழுதடைந்த சமுதாய கூடம்

வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி நாயுடு தெருவில் கடந்த 2005-ம் ஆண்டு ரூ.7 லட்சம் செலவில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சமுதாய கூடத்தின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. எனவே இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் வெளியானது.

இடிக்கும் பணி

இதன் எதிரொலியாக நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் செல்வராஜ், பாஸ்கர் ஆகியோருக்கு உடனடியாக இந்த சமுதாய கூடத்தை இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இந்த சமுதாய கூடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்