நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 65 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 65 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன
கலசபாக்கம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 65 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன
கலசபாக்கம் தாலுகா பட்டியந்தல் கிராமத்தில் உள்ள ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 48 வீடுகளை கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றும் பணி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதன்படி அனைத்து வீடுகளும் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன. அதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்டிருந்த 17 வீடுகளும் அகற்றப்பட்டன.