ஏரி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4 வீடுகள் இடித்து அகற்றம்

ஏரி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2022-11-15 22:21 GMT

எடப்பாடி:

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வெள்ளநாயக்கன்பாளையம் பகுதியில் அச்சம்பட்டி ஏரி அமைந்துள்ளது. ஏரியை ஒட்டிய நீர்நிலைப் பகுதியினை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்த பகுதியை ஆய்வு செய்த நகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் அங்கு ஏரி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை விரைவாக காலி செய்ய அறிவுறுத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து சிலர் காலி செய்தனர். ஆனால் சிலர் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 25-ந் தேதி அன்று அச்சம்பட்டி ஏரி பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் பெய்த மழையால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு கருதி அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் எடப்பாடி நகராட்சி கட்டிட ஆய்வாளர் இயற்கை பிரியன் மற்றும் வருவாய் அலுவலர் குமரகுருபரன் மற்றும் வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4 வீடுகளை இடித்து அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்