ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்

குடவாசலில் ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-08-15 18:45 GMT

குடவாசல்:

குடவாசலில் ஜனநாயக வாலிபர் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்கிஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பகத்சிங் முன்னில வைத்தார். கூட்டத்தில் மாநில செயலாளர் சிங்காரவேலன் கலந்து கொண்டு சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும், சங்கத்தில் கிராமப்புற மற்றும் நகர்புற இளைஞர்களை அதிகம் உறுப்பினர்களாக சேர்த்து இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் கேசவராஜ், துணை தலைவர் சலாவுதீன் உள்பட இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நீதிராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்