ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்,
ஸ்டெர்லைட் நிறுவனம் 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால் பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இங்கு வேலைபார்த்து வந்த பலர் தற்போது வெளிமாநிலங்களில் சென்று வேலைபார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஸ்டெர்லைட் ஆலை திறக்கவேண்டும். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் அந்த ஆலையை சுற்றியுள்ள 21 கிராம மக்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. காப்பர் தட்டுப்பட்டால் கோயம்புத்தூர், திருப்பூர் பகுதிகளில் மோட்டார் கம்பெனிகள் கிட்டத்தட்ட 400 கம்பெனிகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் துறைமுக பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே அரசு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.