சங்கராபுரம் மும்முனை சந்திப்பில்போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசாரை நியமிக்க கோரிக்கை
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த போலீசாரை நியமிக்க கோரிக்கைவிடுத்துள்ளனா்.
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. நகர் பகுதியில் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அவசரஅவசரமாக செல்லும் வாகன ஓட்டிகளால் அந்த பகுதியில் போக்குவரத்து குளறுபடி ஏற்பட்டு, நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபரீதங்கள் ஏதும் நிகழும் முன்பு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு காலை, மாலை நேரங்களில் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.