ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரிக்கை

சிங்கம்புணரியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-06-20 18:17 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி தாலுகா அலுவலகத்துக்கு சர்வதேச உரிமைகள் கழக சிவகங்கை மாவட்ட தலைவர் பெரியய்யா என்ற ராஜா தலைமையில் 10் உறுப்பினர்கள் வந்தனர். அவர்கள் தாசில்தார் கயல்செல்வியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், வட சிங்கம்புணரி பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏைழ மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. மனுைவ பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்