ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி
மயிலாடுதுறையில் பொதுவினியோக திட்டத்தின் மூலம் வழங்க ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
மயிலாடுதுறையில் பொதுவினியோக திட்டத்தின் மூலம் வழங்க ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
அத்தியாவசிய பொருட்கள்
மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் சேமிப்பு கிடங்கில் இருந்து பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்க ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பு வைக்கும் பணி நேற்று நடந்தது.
இந்த பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
பல்நோக்கு சேவை மையம்
எனவே இத்திட்டம் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 64 தொடக்க வேளாண்மை கூட்டு கடன் சங்கங்களையும், பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுவினியோக திட்ட நகர்வு வாகனத்தின் மூலம் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நபார்டு வங்கி நிதி உதவியுடன் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியால் ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
டிரோன்கள் மூலம் உரம் தெளிப்பு
மேலும் இத்திட்டம் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு டிரோன் மூலம் உரங்கள் தெளிக்கும் வகையில் டிரோன்களும், நவீன மயமாக்கப்பட்ட பொது சேவை மையங்கள், விழாக்கூடங்கள், வணிக வளாகங்கள், சிறிய கிடங்குகள் கட்டுதல் மேற்கொள்ளப்பட உள்ளது.
விவசாயிகள் பயனடையும் வகையில் பவர் டில்லர், நாற்று நடவு எந்திரங்கள், வைக்கோல் கட்டும் எந்திரங்கள், டிராக்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்களை வட்டார அளவில் வாடகைக்கு விடும் மையங்கள் அமைக்கப்பட்ட உள்ளன. இதனை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தயாளவிநாயகன் அமல்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், அண்ணாமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.