டெல்லி குழுவினர் ஆய்வு
ஏலகிரி ஊராட்சியில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியை டெல்லி குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி ஊராட்சி பால்காரன் வட்டம் பகுதியில் 7 பண்ணை குட்டைகள் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை டெல்லியில் இருந்து வந்த டாக்டர் எஸ்வந்த் சாய் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பண்ணை குட்டையின் நீளம், அகலம், ஆழம் போன்றவற்றை அளவீடு செய்தனர். மேலும் இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் ஏலகிரி எம்.ரகு, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.