சமூகவலைதளத்தில் அவதூறு:கோவில்பட்டியில் மீன் வியாபாரி கைது
சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட கோவில்பட்டி மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் விஜி என்ற விஜயபாண்டியன் (வயது 47). மீன் வியாபாரி.
இவர் ஒரு சமுதாயத்தை பற்றி அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டு, சமூகவலைத்தளத்தில் பரப்பி உள்ளார். இதை தொடர்ந்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.