சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 3பேர் மீது வழக்கு
தட்டார்மடம் அருகே சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய 3பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தட்டார் மடம் :
தட்டார்மடம் அருகே உள்ள உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த செல்லையா மகன் ஜெயக்குமார் (வயது 57). இவர் கடந்த தசரா விழாவிற்கு அவர் புகைப்படத்தை வைத்து சுவரொட்டி ஒட்டியிருந்தாராம். அதேஊரைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருண்குமார், கணேச பாண்டி மகன் பிரவீன் குமார், சுடலைராஜ் மகன் புருஷோத் ஆகியோர் சுவரொட்டியில் இருந்த அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தும் அவதூறாக சமூக வலைதளத்தில் பரப்பினார்களாம். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் அந்த 3பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.