நாய்களிடம் தப்பிய மான்குட்டி

நாய்களிடம் தப்பிய மான்குட்டி

Update: 2023-02-07 12:46 GMT

சேவூர்

அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், குட்டை பகுதிகளில் ஏராளமான மான்கள் உள்ளன. இவைகள் உணவுக்காகவும், தண்ணீர் குடிப்பதற்காகவும் வெளியே வரும் போது வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும் உயிரிழந்து விடுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் விளை நிலங்களுக்குள் புகுந்து, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சேவூர் அருகே அ.குரும்பபாளையம் பெரியசாமி என்பவரது தோட்டத்து பகுதியில் மான் குட்டியை நாய்கள் துரத்தி வந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் நாய்களிடம் இருந்து காயமின்றி ஆண் மான் குட்டியை மீட்டனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் மான் குட்டி அங்குள்ள குளப்பகுதியில் விட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்