மான் இறைச்சி விற்றவர் கைது
ஆம்பூர் அருகே மான் இறைச்சி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூரை அடுத்த ஆம்பூர்துருகம் காப்புக்காட்டில் மான் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக ஆம்பூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டின் அருகில் மான்் இறைச்சி வெட்டிக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பைரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் (வயது 60) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.