மங்களமேடு அடுத்துள்ள முருக்கன்குடி பிரிவு பாதை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் ஒன்று அடிபட்டு படுகாயம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. பின்னர் படுகாயம் அடைந்த மானுக்கு கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மான் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் கால்நடை டாக்டர் பரிசோதனை செய்து மங்களம் காப்புக்காடு பகுதியில் புதைக்கப்பட்டது.