பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி புள்ளி மான்கள் அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. இந்நிைலயில் தண்ணீர் தேடி கீழப்பெருங்கரை கிராமத்திற்கு 3 வயது புள்ளிமான் வந்தது. அந்த மான் மதுரை-ராமேசுவரம் நான்கு வழி சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் புள்ளிமான் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து அறிந்த கமுதக்குடி வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று இறந்த மானின் உடலை மீட்டு பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.