கிணற்றுக்குள் செத்து மிதந்த மான்

கிணற்றுக்குள் மான் செத்து மிதந்தது.

Update: 2022-06-06 18:46 GMT

பெரம்பலூர் 

பெரம்பலூரில் இருந்து வடக்கு மாதவி செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு விவசாயின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று காலை ஒரு மான் ஒன்று செத்து மிதந்து கொண்டிருந்தது. இதனை கண்ட பக்கத்து தோட்டத்துக்காரர் இதுகுறித்து பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் கிணற்றுக்குள் செத்து மிதந்து கொண்டிருந்த மானின் உடலை கைப்பற்றி, அதனை புதைத்தனர். வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த மான், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும், இறந்தது 2 வயதுடைய ஆண் மான் என்றும் வனத்துறையினர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்