போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு; சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது

தென்காசியில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்து, நிலம் மோசடி செய்ததாக சார்பதிவாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-29 17:24 GMT

மதுரையைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமாக 1.75 ஏக்கர் நிலம் தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் உள்ளது. இந்த இடத்தை போலியான ஆவணங்களை கொண்டு சோமசுந்தர பாரதி (வயது 40) என்பவருக்கு தென்காசி சார்பதிவாளர் இணை-1 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கண்ணன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தி செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் மணி (வயது 49), சோமசுந்தர பாரதி ஆகியோரை கைது செய்தார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த திருச்சியை சேர்ந்த லலிதா, தென்காசியை சேர்ந்த முகமது ரபிக், சுரண்டையை சேர்ந்த பவுன்ராஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்து நிலம் மோசடி செய்த சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்