நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம்கொலையா? போலீஸ் விசாரணை

நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-23 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் தென் பெண்ணையாற்றின் கரையோரம் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

போலீசார் விசாரணை

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, அவரை யாரேனும் கொலை செய்து ஆற்றின் கரையோரம் தூக்கி வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்