இன்ஸ்டாகிராம் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு

அரிவாளுடன் வீடியோ வெளியாதை நீக்காததால் இன்ஸ்டாகிராம் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்து உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Update: 2023-05-02 18:45 GMT

அரிவாளுடன் வீடியோ வெளியாதை நீக்காததால் இன்ஸ்டாகிராம் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்து உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

அடுத்தடுத்து கொலை

கோவையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் அடுத்தடுத்து 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், 2 ரவுடி கும்பல்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது.

இந்த வழக்குகளில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ரவுடிகளின் பட்டியலை தயா ரித்து 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்த னர். மேலும் பலரிடம் பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்

இந்த நிலையில் இளைஞர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் நிற்பதுபோன்ற புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர். இது தொடர்பாக தமன்னா என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.

இதற்கிடையே இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட அரிவாள் மற்றும் ஆயுதங்கள் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்குவது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் மூலம் பெங்களூருவில் உள்ள இன்ஸ்டாகிராம் தலைமை அலுவலகத்துக்கு தகவல் அனுப்பினர்.

நீக்கவில்லை

அது தொடர்பாக இன்ஸ்டாகிராம் அதிகாரிகள் சில விளக்கம் கேட்டனர். அதை போலீசார் அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பிறகும் அரிவாள் உள்ளிட்டஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகி றது. எனவே மேல்நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகர பகுதியில் அரிவாள், கத்தியுடன் புகைப்படம், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தது தொடர் பாக 27 பக்கங்களை நீக்க இன்ஸ்டாகிராம் நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த பக்கங்களை நீக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே இன்ஸ்டாகிராம் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்து உள்ளோம். அவர்களை கோவைக்கு வரவழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு ஆயுதங்களுடன் இருக்கும் அந்த பக்கங்களை நீக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்