கருணாநிதி திட்டங்களை மீண்டும் செயல்படுத்த முடிவு - மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திட்டங்களை ஆய்வு செய்ய நீர்வளம், நிதி, நகராட்சி நிர்வாகம், உள்துறை முதன்மையச் செயலாளர்களைக் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நினைவில் உள்ள திட்டங்கள், தோற்றுவித்த திட்டங்கள், நிறுவிய திட்டங்கள், சீர்திருத்தங்கள் ஆகிய நான்கு தலைப்புகளில் கருணாநிதி ஆற்றிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன.