சென்னை மாநகராட்சியில் 10 இடங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்த கட்டிடங்கள் கட்ட முடிவு
சென்னையில் பன்னடுக்கு வாகன நிறுத்த கட்டிடங்கள் கட்ட மேயர் பிரியா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதியில் வாகன நிறுத்தங்களை மேம்படுத்துவது தொடர்பாக மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது.
சென்னையில் 12 ஆயிரம் கார்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிடங்கள் அடையாளம் காணப்பட்டாலும், அவற்றில் 5 ஆயிரம் கார்களை மட்டுமே நிறுத்த முடிகிறது. எனவே சென்னையில் பன்னடுக்கு வாகன நிறுத்த கட்டிடங்கள் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது.
இதற்காக சென்னை மாநகரில் திருவொற்றியூர் நகராட்சி வணிக வளாக கட்டிடம், அடையாறு இந்திரா நகர் 3-வது அவென்யூ சாலையில் உள்ள வணிக வளாகம் உள்ளிட்ட 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.