சென்னை தீவுத்திடலில் டிச. 30ஆம் தேதி பொருட்காட்சி தொடக்கம்

சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30ஆம் தேதி சுற்றுலா பொருட்காட்சி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-27 17:41 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருட்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொருட்காட்சி அதன் பிறகு கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை

இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30ஆம் தேதி 47-வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சி தொடங்குகிறது. 70 நாட்கள் நடைபெறும் பொருட்காட்சியில், அரசு, பொதுத்துறை நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக பொருட்காட்சி ஒருங்கிணைபாளர் அனிஸ்ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் வருகிற 30-ஆம் தேதி சுற்றுலா தொழில் பொருட்காட்சியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்