தீக்காயம் அடைந்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி சாவு
தீக்காயம் அடைந்த மாற்றுத்திறனாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
குளித்தலை அருகே உள்ள ஆணைகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுத்து (வயது 33). கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 24-ந்தேதி மாலையில் தனது வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமைப்பதற்காக மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாலமுத்து மீது தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அலறி துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலன்றி பாலமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாலமுத்துவின் மனைவி கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்