தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
தட்டார்மடம் அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே அழகப்பபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). தொழிலாளி. இவர் படுக்கப்பத்து வெயிலுகந்தம்மன் கோவில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக உயரதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கனகராஜ், படுக்கப்பத்து பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு தொழிலாளியான வினித்ராஜா (50) என்பவர் அவதூறாக பேசி, அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித்ராஜாவை தேடிவருகின்றனர்.