சலூன் கடைக்காரருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் மீது வழக்கு
சலூன் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அன்னவாசல் அருகே உள்ள வீரப்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 42). இவர் இலுப்பூரில் சலூன்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இலுப்பூரில் இருந்து வீரப்பட்டிக்கு மனோகரன் சென்றுள்ளார். அப்போது விநாயகர் கோவில் அருகே அதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33) என்பவர் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மனோகரன் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.