முதியவருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

சேரன்மாதேவி அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-02 19:56 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே உள்ள கங்கணாங்குளம் வேலியார்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 37). இவர் அப்பகுதியில் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த பால் (88) என்பவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள், வேலியார்குளம் கோவில் அருகே பால் சென்றபோது அவரை வழிமறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்‌. இதுகுறித்த புகாரின் பேரில் சேரன்மாதேவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவாளன் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்