பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

பெரியகுளம அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் ைகது செய்தனர்.

Update: 2022-11-29 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள பங்களாபட்டியை சேர்ந்த பாண்டியராஜ் மனைவி கலைவாணி (வயது 25). அதே ஊரை சேர்ந்தவர் முத்துவேல் (26). இவரது மனைவிக்கும், கலைவாணிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் கலைவாணி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற முத்துவேல், அவரது அண்ணன் முத்துராஜா (29) ஆகியோர் சேர்ந்து பணத்தைக் கொடுக்க மாட்டியா என்று கூறி கலைவாணியை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலைவாணி பெரியகுளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேலை கைது செய்தனர். முத்துராஜாவை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்