பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு

Update: 2023-06-22 18:34 GMT

பாலக்கோடு

பாலக்கோடு அருகே எர்ரன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா (வயது 45). தொண்டு நிறுவன பிரதிநிதி. இவருக்கு சொந்தமான 66 சென்ட் நிலத்தில் முள்வேலி அமைத்து அருகில் குடியிருந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (55), சபரீசன் (30), ராஜசேகர் (27) ஆகியோருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று சந்திரகலா வீட்டுக்கு சென்ற 3 பேர் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சந்திரகலா பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் முருகன், சபரீசன், ராஜசேகர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்