கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்

சாக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 35 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-06-24 18:18 GMT

காரைக்குடி,

சாக்கோட்டையில் உள்ள கோவில் அருகே சிலர் தேங்காய் பழக்கடை வைப்பதற்காக உரிய அனுமதியின்றி இரவோடு இரவாக தகர செட் போடுவதை அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் வீராசாமியும் அவரது உதவியாளரும் சென்று கேட்டபோது, அவர்கள் அனைவரும் கிராம நிர்வாக அலுவலர் என்று தெரிந்திருந்தும் அவரை பணியைச் செய்யவிடாமல் தடுத்து அவரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் சகாதேவன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல் கோவில் அருகே அனுமதி இல்லாமல் தகரக்கொட்டகை போட்டதை அகற்ற கோரி சம்பவ இடத்திற்கு அருகே சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்தவர்களை கிராம நிர்வாக அலுவலர் வீராசாமியும் அவரது உதவியாளரும் தடுத்து கேட்டபோது, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிராம நிர்வாக அலுவலரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கிராம நிர்வாக அலுவலர் வீராசாமி கொடுத்த புகாரின் பேரில் சண்முகம் உள்பட 25 பேர் மீது சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்