போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்
கண்ணமங்கலம் அருகே போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல் விடுத்த சகோதரர்களான 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே போலீஸ்காரருக்கு கொலைமிரட்டல் விடுத்த சகோதரர்களான 3 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்
கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று அன்பழகன் (வயது 30) என்ற போலீஸ்காரர் உள்பட போலீசார் சாதாரண உடையில் சாராய வேட்டை நடத்தினர்.
பின்னர் குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே போலீஸ்காரர் அன்பழகன் வந்தபோது அங்கு 4 பேர் ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டு, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக தகராறு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் அன்பழகன் அவர்கள் 4 பேரையும் எச்சரிக்கை செய்தார். அதற்கு அவர்கள் அன்பழகனிடமும் தகராறு செய்து, அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் நீ என்ன போலீசா என கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
4 பேர் கைது
இது குறித்து அன்பழகன் கண்ணமங்கலம் போலீஸ் நிைலயத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து, குப்பம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் அய்யப்பன் (25), பழனி (36), முருகன் (25), மணி மகன் சரவணன் (36) ஆகிய 4 பேரையும் கைது செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி காவலில் வைத்தனர்.
கைதான அய்யப்பன், பழனி, முருகன் ஆகிய மூன்று பேரும் சகோதரர்கள் ஆவார்கள்.
ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் போலீஸ்காரரை மிரட்டியதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.