போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்:வாலிபர் கைது
ேபாடியில் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன், போடி நகர் போலீஸ் ஏட்டு ராஜா ஆகியோர் போடி தேவர் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில், பையில் மதுபாட்டில்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் குப்பிநாயக்கன்பட்டி வஞ்சி ஓடை தெருவை சேர்ந்த பிச்சைமணி (வயது 32) என்பதும், மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதற்கிடையே விசாரணையின்போது பிச்சைமணி, போலீஸ் ஏட்டு ராஜாவை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அடித்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் போடி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிச்சைமணியை கைது செய்தனர்.