ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு கொலை மிரட்டல்
வந்தவாசி அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு கொலை மிரடடல் விடுத்த தந்தை-மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த விளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் எட்வர்ட் பிரான்சிஸ் (வயது 54). இவரது மனைவி வனிதா, விளாங்காடு ஊராட்சி மன்ற தலைவி.
இந்த நிலையில் எட்வர்ட் பிரான்சிசுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதையடுத்து சுரேஷின் உறவினரான முருகன், அவரது மகன்கள் முரளி, வினோத் ஆகிய 3 பேரும் எட்வர்ட் பிரான்சிஸ் வீட்டுக்கு சென்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் முருகன், முரளி, வினோத் ஆகிய 3 பேர் மீது கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.