வக்கீலுக்கு கொலை மிரட்டல்
மதுரையில் வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் சுமேஷ். வக்கீலான இவர், எஸ்.எஸ்.காலனி போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், தி.மு.க. வக்கீல் அணி துணை அமைப்பாளராக இருக்கிறேன். நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தேன். இதனால், 3 பேர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.