வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்

புதுக்கடை அருகே வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-13 14:32 GMT

புதுக்கடை:

புதுக்கடை அருகே வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவரை போலீசார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்த மண்எண்ணையை சிலர் பதுக்கி வைத்து கேரளாவுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் ராமன்துறை பகுதியை சேர்ந்த மீனவரான ஜேசுபாலன் (வயது 38) என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக மானிய விலை மண்எண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் மற்றும் வருவாய் ஆய்வாளர் சஜித் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 34 கேன்களில் 1200 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வருவாய்த்துறை ஊழியர்கள் இதை பறிமுதல் செய்தபோது மண்எண்ணெயை பதுக்கி வைத்திருந்த ஜேசுபாலன் வருவாய்த்துறை ஊழியர்களிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜேசுபாலனை போலீசார் தேடி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்