ஏலக்காய் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்

போடியில் ஏலக்காய் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-01-18 19:00 GMT

போடி பெரியாண்டவர் குளத்து தெருவை சேர்ந்தவர் விகாஸ்குமார் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஏலக்காய் கடையில் வேலை செய்து வருகிறார். அந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த பூபதி (29) என்பவர் அடிக்கடி வந்து தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கடைக்கு பூபதி வந்து விகாஸ்குமாரை தகாதவார்த்தையால் பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்