தண்டனை கைதி சாவு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தண்டனை கைதி இறந்தார்

Update: 2022-12-20 21:30 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையை சேர்ந்தவர் பொன்னையா மகன் விஜயகுமார் (வயது 43). இவர் ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று காலையில் உயிர் இழந்தார்.

இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்