மொபட்டில் இருந்து தவறி விழுந்து கார் டிரைவர் சாவு
மொபட்டில் இருந்து தவறி விழுந்து கார் டிரைவர் இறந்தாா்.
கடத்தூர்:
கோபி அருகே உள்ள பழையவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 56) கார் டிரைவர். இவர் கடந்த 19-ந் தேதி வெள்ளாளபாளையம் சென்றுவிட்டு மொபட்டில் கோபிக்கு சென்றுகொண்டு இருந்தார். கோபி அண்ணா பாலம் அருகே சென்றபோது மொபட்டிலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வேலுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பிவைத்தார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் ஆனால் செல்லும் வழியிலேயே வேலுச்சாமி இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த வேலுச்சாமிக்கு தங்கமணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.