பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் சாவு

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் இறந்தார்.

Update: 2022-06-04 19:21 GMT

நெல்லை:

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் தற்போது வைகாசி மாதம் முகூர்த்த நாட்கள், விடுமுறை காலம் என்பதால் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பாபநாசம் மற்றும் நாகர்கோவில் செல்லும் பஸ்கள் நிற்கும் பிளாட்பாரங்களில் கடும் கூட்டம் அலைமோதியது. பஸ்கள் வந்தபோது அதில் ஏறுவதற்கு முண்டியடித்தனர்.

பாபநாசம் செல்வதற்கு ஒரு பஸ் வந்தது. வீரவநல்லூரை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆறுமுகம் (வயது 74) என்பவர் அந்த பஸ்சில் ஏற முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது கால், பஸ் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆறுமுகம் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முகூர்த்த நாட்கள், விழா மற்றும் விடுமுறை காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்