மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-13 15:30 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள முகமாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கநாடார் (வயது 72). இவர் சம்பவத்தன்று கோழிப்போர்விளையில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அந்த வழியாக வந்த கோவில் பூசாரியான கேரள மாநிலம் தண்ணியம் பகுதியை சேர்ந்த நந்து (24) என்பவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு ஏறினார். தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அமராவதி பகுதியில் வைத்து நந்து திடீரென மோட்டார் சைக்கிளில் பிரேக்கை பிடித்தார். இதில் நிலைதடுமாறிய தங்கநாடார் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தங்கநாடார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்